கவிதை

ஞாபகம் வந்தது!

காய்ச்சல் வரும் தருணம்

     ஐஸ்க்ரீம் ஞாபகம் வந்தது

சமைத்து முடித்த பின்

      உப்பின் ஞாபகம் வந்தது

பரீட்சை எழுதும் பொழுது

      அடித்த அரட்டைகள் ஞாபகம் வந்தது

அமாவாசையின் பொழுது

       நிலவின் ஞாபகம் வந்தது

கல்லூரி சென்றால்

       பள்ளியின் ஞாபகம்

முப்பது வயதில் கல்லூரியின்

       நினைவுகள்!

ஞாபகம் வந்தது

      அருமை புரிந்தது

காலமும் கடந்தது

       ஞாபகங்களை பரிசளித்து!

Advertisements